காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோட்டில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. தமிழக அரசு நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் பல கடைகள் நெடுஞ்சாலையில் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அமைத்து வருகின்றனர்.
இதே போல் ரெட்டியார் ரோட்டில் செயல்படும் கடைகளை அப்புறப்படுத்தாமல் உடையார்குடி செட்டித்தெரு பகுதியில் வழி அமைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு ஏதுவாக தற்போது இயங்கும் டாஸ்மாக் கடைகளின் பின்புறம் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதையறிந்த உடையார்குடி செட்டித்தெருவில் வசிக்கும் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தலைமையிடத்து துணை தாசில்தார் எழிலனிடம் மனு அளித்தனர். அதில் ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறை காலங்களில் திருட்டு தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வரும்போது இந்த வழியாக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை. பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். பெண்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில் குடித்து விட்டு ஆடைகள் இன்றி குடிமகன்கள் சாலையோரங்களில் கிடக்கின்றனர். மேலும் குடிமகன்கள் இடையே தகராறு ஏற்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு ஏதுவாக டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு இல்லாத பகுதிக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டுமென
கூறியுள்ளனர். மேலும் அதே இடத்தில் டாஸ்மாக் கடையை திறந்தால் போராட்டம் செய்வோம் என கூறினர்.
-தினகரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...