Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 17, 2013

நாடு முழுவதும் பிரசவத்திற்க்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படும்!-குலாம்நபி ஆசாத்

நாடு முழுவதும் பெண்களுக்கு கருத்தரிப்பு முதல் பிரசவம் வரையும், பிரசவத்துக்குப்பின் 45 நாட்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசு ஜனனி சுரக்ஷ யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ காலம் முழுவதும் மற்றும் பிரசவத்துக்கு பிறகு 45 நாட்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும், பிரசவத்துக்கு இலவசமாக அவசர ஊர்தி சேவையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் முதல் ஒரு ஆண்டு வரை குழந்தைக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்த ராஷடிரீய பால் சுரக்ஷ கர்யாக்ராம் திட்டத்தின்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர்
மருத்துவ படிப்பு முடித்து வரும் மாணவர்கள் கிராமப்புறங்களில் பணி செய்ய விரும்பாததால், கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவ மாணவர்களுக்கு கூடுதலாக ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...