காட்டுமன்னார்கோவில் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கிராமப்புற மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக 100 நாள் வேலை திட்டம் என்ற பெயரில் அரசு செயல் படுத்தி வருகிறது.
இதில் குடும்பத்தில் ஒருவர் 100 நாட்கள் வேலை செய்து அதன் மூலம் அரசு அளிக்கும் ஊதியத்தை கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் பணி செய்யும் ஊழியர்களுக்கு குறைந்த அளவே ஊதியத்தை அளித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை அறிந்த அரசு, பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் ஊதியம் வழங்க முடிவு மேற்கொண்டது. இதை யடுத்து அனைத்து கிராமங்களிலும், தொழிலாளர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. மேலும், பணிகள் நடைபெறும் விதங்களை இணையதளத்திலும் பதிவு செய்து வருகின்றனர். இதனால் வரும் காலங்களில்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
-தினகரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...