சிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சிவராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சரவணன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வீராணம் ஏரியில் படகு விடும் திட்டம் விவசாயிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் விளையாட்டு பூங்கா அமைக்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மாசுபடும் ஆபத்து உள்ளது. ஆகவே இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் பயிர்காப்பீட்டு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும். கூட்டுறவு பயிர்கடன்களின் உச்சவரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். கடந்த ஆண்டு விவசாயிகள் வாங்கிய கடனுக்காக செலுத்திய பயிர்காப்பீட்டு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் குமராட்சி ஒன்றிய
செயலர் தங்ககென்னடி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செயலர் தங்ககென்னடி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...