காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது கொள்ளுமேடு. இந்த கிராமம் வீராணம் ஏரிக்கரையில் உள்ளது. கரை முழுவதும் சேத்தியாத்தோப்பு வரை புளிய மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
புளிய மரத்தை மின் கம்பமாக சில பகுதிகளில் மாற்றி வருகின்றனர். கிராமத்துக்கு இரவு நேரங்களில் செல்வதற்கு வசதியாக மின் விளக்குகளை புளிய மரங்களின் பொருத்தி உள்ளனர்.
மழை காலங்களில் புளிய மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளிலிருந்து மின் கசிவு ஏற்பட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதே போன்று சாலையோர புளிய மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை மின்சார வாரியம் கண்டு கொள்வது கிடையாது. உயிர் பலி ஏற்பட்ட உடன் தங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று கூறி தப்பித்துக்கொள்ள நினைக்கிறது. தெரு மின் விளக்குகள் எரியாமல் உள்ளதை கண்டுகொள்வதில்லை. ஆகவே கொள்ளுமேடு பகுதியில் புளிய மரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:தினகரன்
நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் சிராஜுத்தீன் அவர்கள் இதில் கவனம் செலுத்தி புளிய மரத்தில் உள்ள விளக்குகளை அகற்றி மின்கம்பன்களை அமைக்குமாறு கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.
நன்றி:தினகரன்
நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் சிராஜுத்தீன் அவர்கள் இதில் கவனம் செலுத்தி புளிய மரத்தில் உள்ள விளக்குகளை அகற்றி மின்கம்பன்களை அமைக்குமாறு கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.
1 கருத்துகள்:
பல ஆண்டுகளாக கொள்ளுமேட்டில் இதே நிலை தான் என்றைக்கு போட்டி பொறாமைகள் ஒழிகிறதோ அன்றுதான் நம் ஊர் சிறந்து விளங்கும்....
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...