வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள இணையதள மையங்கள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டத்தில் அனுமதி பெற்ற இணையதள மையங்கள் மூலம் பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தல், விபரங்கள் தேடுதல், வாக்காளர் பட்டியல் நகலினை அச்சிடுதல் ஆகிய பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கு விருப்பம் தெரிவிக்கும் இணையதள மையங்களுடன் மாவட்ட நிர்வாகம் இதற்காக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளவுள்ளது. அதேபோல் பொதுமக்களிடமிருந்து எவ்வளவு கட்டணம் பெறவேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர்நீக்கல், திருத்தங்கள், ஒரே சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இருப்பிடம் மற்றும் முகவரி குறித்து விண்ணப்பித்திடவும், இணைய தளம் மூலம் புகார்கள் பதிவு செய்யவும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் (ஒரு பக்கத்திற்கு) அச்சிட்டு தரவும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி மையங்களின் பெயர் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் புகார்களின் நிலை குறித்து அறியவும் ரூ.3 கட்டணமாக வாங்கப்படும். வாக்காளர் பட்டியல் விவர தேடல்களின் முடிவுகளை அச்சிட்டு அளிக்க ரூ.2 கட்டணம் வசூலிக்க வேண்டும். எனவே, இப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள, கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனுமதி பெற்ற இணையதள மையங்களின் உரிமையாளர்கள் தங்களது விண்ணப்பத்தை
வரும் 15-ம் தேதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், ஆட்சியர் அலுவலகம், கடலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இதுதவிர கடிதத்தினை தொடர்புடைய வட்டங்களின் வருவாய் வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோர்களிடம் கொடுக்கலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...