Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 09, 2013

புத்த கயா குண்டுவெடிப்பு:பினோத் குமார் என்ற காவி பயங்கரவாதி கைது!

புத்த கயாவில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, முக்கிய நபர் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாபோதி கோவிலில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அதில், முக்கிய தடயங்கள் இருப்பதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பீகார் டி.ஜி.பி., அபாயனந்த் கூறியதாவது:குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து, விசாரித்தோம். இதன் அடிப்படையில், கயா மாவட்டத்தை சேர்ந்த, பினோத் குமார் என்ற நபரை கைது செய்து, விசாரித்து வருகிறோம். அவரிடமிருந்து, சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

குண்டு வெடிப்புக்காக, அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதும், ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குண்டு வெடித்த இடத்தில், ஒரு பேப்பர் கிடந்தது. அதில், எந்தெந்த இடத்தில், குண்டுகள் வைக்கப்பட்டுள்ள என்ற விவரங்கள், ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தன.மகாபோதி கோவிலின், முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தன. குண்டு வெடிப்பின்போது, நிகழ்ந்த சம்பவங்கள், அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதை ஆய்வு செய்ததில், சில முக்கிய தகவல்கள் சிக்கியுள்ளன.குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், 25 வயது மதிக்கத் தக்க, ஒரு பெண்ணும், ஆணும், கோவிலுக்கு முன் உள்ள சாலையில் நடந்து செல்வது போலவும், குண்டு வெடித்ததும், சிறிது நேரம் அங்கு நின்று,திரும்பி பார்ப்பது போலவும், பின், இரண்டு பேரும், அங்கிருந்து வேகமாக செல்வது போலவும், காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதன் அடிப்படையில், மேலும் சிலரை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அபாயனந்த் கூறினார்.

கயா மாவட்ட கலெக்டர், பாலமுருகன் கூறியதாவது:சம்பவ இடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், தடயங்களை சேகரித்து வருகின்றனர். விசாரணையையும்
துவக்கியுள்ளனர். விசாரணை முடிவடைந்தால் மட்டுமே, இதுகுறித்த, தகவல்களை வெளியிட முடியும். குண்டு வெடிப்பு காரணமாக, மகாபோதி கோவில் மூடப்படவில்லை. பிரார்த்தனைகள் வழக்கமான முறையில் நடக்கின்றன.இவ்வாறு, பாலமுருகன் கூறினார்.

எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே இஸ்லாமியர்களின் மீது பழிப்போ டும் மீடியாக்களும் அரசு அதிகாரிகளும் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.ஒரு சமூகத்தையே கொடூரமானவர்களாக சித்தரிக்க துடிப்பதின் பின்னனியில் உள்ள சதி திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
அல் குரான் 86:15-17 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...