Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 20, 2013

சமூக வலைத் தளங்களைப் 13 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை!:உயர் நீதிமன்றம்!

முக நூல், ஆர்குட் (Face book, Orkut) போன்ற வலைதளங்களை 13 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட வலை தளங்களின் நிர்வாகத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

 சமூக வலை தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்கவும், இவைகளில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்க சமூக வலை தள நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 13 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பார்வையிட அனுமதி இல்லை என்ற வாசகத்தை பெரியளவில் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் ஒரு தலைமுறையின் பிரச்னை
மட்டுமின்றி, சமுதாயம் தொடர்புடையதும் கூட என்பதால், மத்திய அரசு இந்த விஷயத்தில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...