Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 01, 2013

மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கிகள்!

இஸ்லாமிய வங்கித்துறையில் முதன்மை நிலை பெற்றுள்ள அமானா வங்கி கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற Islamic Finance News Awards விழாவில் இரண்டாவது ஆண்டாகவும் இலங்கையின் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கி என்னும் கௌரவத்தை பெற்றுக் கொண்டுள்ளது. மலேசியாவின் Red Money Group நிறுவனத்தினால் 2012ஆம் ஆண்டில் உலக மட்டத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் உலகளவில் இஸ்லாமிய வங்கிச் சேவைகளை மிகத்திறம்பட வழங்கிவரும் நிதிநிறுவனங்கள் விருதுகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டன.

விருதுகளுக்கென உலகின் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கி, ஒவ்வொரு நாட்டிலும் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கி, மிகச்சிறந்த மத்திய வங்கி, ஆண்டுக்கான மிகச்சிறந்த இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல்கள் என்பன தேர்ந்தெடுக்கப்பட்டன. மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கிச் சேவைகளை வழங்கும் வங்கிகளை தெரிவு செய்வதற்கென தேர்தல் ஒருசார்பற்றதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், அனைத்து விடயங்களையும் உள்ளடக்கும் அணுகுமுறை கொண்டதாகவும் அமைந்தது. மேற்படி சாதனை பற்றி அமானா வங்கியின் முகாமைப் பணிப்பாளர் பைசல் சாலி பின்வருமாறு தெரிவித்தார். 'இந்த வெற்றியானது, இலங்கையில் இஸ்லாமிய வங்கித்துறையை வளர்த்தெடுப்பதில் எமது விடாப்பிடியான உறுதிப்பாட்டினை உறுதிசெய்கிறது. இந்த உலக விருதானது அமானா வங்கி நாடு முழுவதற்கும் தன்னை விஸ்தரித்தும் வலுவூட்டியும் முன்செல்லும் ஒரு நேரத்திலேயே கிடைத்திருக்கிறது. இத்துறையில் பல நிதிநிறுவனங்கள் பிரவேசித்துவரும் நிலையில் எமக்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கிடைத்து வருகின்றன. எமது வங்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவதன் மூலம் இஸ்லாமிய பைனான்ஸ் செய்தி வாக்கெடுப்பு நிகழ்வில் நாம் வெற்றியாளர்களாக மிளிர்வதற்கு உதவிய வாடிக்கையாளர்கள், செயற்திட்ட உதவியாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.

 மலேசியாவின் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கியாக Bank Islam Berhad தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி அமானா வங்கியின் செயற்திட்டப்பங்காளியாகும். இலங்கையில் அது ஒரு தொழில்நுட்ப பங்காளியாக செயற்படுகின்றது. இலங்கையின் முதலாவது உரிமம் பெற்ற வர்த்தக
வங்கியான அமானா வங்கியியல் தத்துவத்தினை முழுமையாக பேணி தொழிற்படும் ஒன்றாகும். மலேசியாவின் பாங்க் இஸ்லாம் பேர்ஹாட், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்காளதேஷ் ஏ.பீ.பாங்க் என்பவற்றின் உறுதி மிக்க ஆதரவுடன் அமானா வங்கி இலங்கையின் வங்கித்துறையில் பெரு முன்னேற்றம் கண்டு வருகின்றது. ஷரியா வங்கி முறைமையின் முன்னோடியாக திகழ்ந்து வரும் அமானா வங்கி இத்தகையதொரு உயர்வான வங்கியியல் கத்தினை நாட்டின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் வேரூன்றச்செய்வதில் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றது.
source:http://tamil.dailymirror.lk

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...