புதுடெல்லி:ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அப்பகுதியில் ஆய்வுச் செய்ததாக கைதான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வழக்கில் கைதான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ராஜேந்திர சவுத்ரி, தேஜாராம் பர்மர் ஆகியோர் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விசாரணையின் போது ராஜேந்தர் சவுத்ரி அளித்த வாக்குமூலம்: குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு பரிசோதனைச் செய்ய மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலில் இருந்து 2007 பெப்ருவரி மாதம் நான் உள்ளிட்ட குழுவினர் ஹைதராபாத்திற்கு சென்றோம்.சார்மினார் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட நாங்கள் குண்டுவைப்பதற்கான இடத்தை கண்டுபிடிக்க ஆட்டோ ரிக்ஷாவில் சுற்றினோம்.சுற்றுலா பயணிகளைப் போல மக்கா மஸ்ஜிதில் நுழைந்த நாங்கள், தொழுகைக்கு வருபவர்களை கண்காணித்து திட்டங்களை தயாரித்துவிட்டு திரும்பினோம். தேஜாராம் பர்மர் அளித்த வாக்குமூலம்: மே 16-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் மானவதா நகருக்குச் செல்ல ராஜேந்தர் சவுத்ரி உத்தரவிட்டார்.அங்கு தீவிரவாததாக்குதல்களின் தலைவனான ராம்ஜி கல்சங்கரா எங்களிருவரையும் காத்திருந்தார்.
கல்சங்கரா இரண்டு பைகளில் வெடிக்குண்டுகளை அளித்தான்.மே 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஹைதராபாத்திற்கு சென்ற சவுத்ரியும், நானும்ம் ஆட்டோ ரிக்ஷாவில் மக்கா மஸ்ஜிதுக்கு அருகில் சென்றோம்.ஒரு வெடிக்குண்டை மஸ்ஜிதின் கேட்டில் நான் தொங்கவிட்டேன்.ராஜேந்தர் சவுத்ரி ஒரு வெடிக்குண்டை மஸ்ஜிதின் மத்திய முற்றத்தில் வைத்தான்.பின்னர் நாங்கள் இருவரும் அவுரங்கபாத் வழியாக மத்தியபிரதேசம் சென்றோம்.இவ்வாறு பர்மர் வாக்குமூலம் அளித்துள்ளான். மத்தியபிரதேசத்தைச் சார்ந்த ராஜேந்தர் சவுத்ரி, சுமந்தர் மற்றும் பஹல்வான் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறான்.மல்யுத்த போட்டிகளை நடத்தும் இவனுக்கு துப்பாக்கி உபயோகிப்பது குறித்த பயிற்சியும் பெற்றுள்ளான்.ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலின் தலைவனும், ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின்
பிரச்சாரக்குமான சுனில் ஜோஷியை கருத்துவேறுபாட்டில் சுட்டுக்கொலைச் செய்தவனும் ராஜேந்தர் சவுத்ரி ஆவான்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். குண்டுவெடிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய 5 முஸ்லிம்களை போலீஸ் சுட்டுக்கொலைச் செய்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...