Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2013

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

     மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வருகின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி மாணவ - மாணவிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதுதான் நுழைவுத் தேர்வு ரத்துக்கு அடிப்படையான காரணமாகும்.

 இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப் புக்கும் மற்றும் எம்.டி, எம்.எஸ். போன்ற மேற்படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கை நடை பெறும் என்று, மத்திய அரசின் கட்டுப்பாட் டில் உள்ள இந்திய மருத் துவ கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்து இருந் தது. தமிழக அரசு மட் டுமின்றி, ஆந்திரா உள் ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தன. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்த மொத்தம் உள்ள 23 வழக்குகளும் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றப் பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நேற்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருக் காது என்றும், தற்போது உள்ள நிலையே தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது. என்றாலும், இதில் இறுதி தீர்ப்பை, வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஒரு வேளை இந்த தீர்ப்பில் மாற்றம் எதுவும் வந்தாலும், மாணவர்கள் நலன் கருதி அடுத்த கல்வி ஆண்டுக்குத்தான் அந்த தீர்ப்பு பொருந்தும். இதற்கிடையில், இந்த வழக்கில் கடந்த
டிசம்பர் மாதத்தில் உத்தரவு ஒன்றை உச்சநீதி மன்றம் பிறப்பித்து இருந்தது. இந்திய மருத் துவகவுன்சில், மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை ஏற்கெனவே நடத்தி இருந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு உள்ளிட்ட நுழைவுத் தேர்வின் முடிவுகளை வெளியிட அந்த உத்தரவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய இடைக்கால தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி அந்த தடையும் நீக்கப்பட்டது.

-viduthalai

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...