மத்தியில் 10 சதவீதம் மாநிலத்தில் 7 சதவீதம் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி, பல்லாவரத்தில் மே 26 அன்று சமூக நீதி மாநாடுஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அறிவிப்பு!
தேசிய அளவில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி கடந்த ஏப்ரல் 14 ,2013 முதல் ஏப்ரல் 14, 2014 வரை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக வருகிற 26 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் முஸ்லீம்களுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி இடஒதுக்கீடு கோரி மாபெரும் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது.
நம் நாட்டில் வாழும் முஸ்லீம்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ளனர் என்பது மத்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கைகளின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையை மாற்ற மத்திய அளவில் கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரையும் செய்தது. அந்த பரிந்துரையின் மீது மத்திய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை பொருத்தவரை
முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருந்தாலும் இது தமிழகத்தில் வாழும் 7 சதவீத முஸ்லீம்களுக்கு போதுமானதல்ல.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தற்போதைய தமிழக முதல்வர் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த பரிசீலனை செய்வோம் என அறிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் அ.தி.மு.க அரசு எடுக்கவில்லை. எனவே மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீடையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு எஸ்.டி.பி.ஐ கட்சி மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் சமூக நீதி மாநாட்டை நடத்துகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...