Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 09, 2013

பிளாஸ்டிக் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகள்....

நாட்டில் பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருவதற்கான முன்னோடிக் கல்வி நிறுவனம் சிபெட் என்று அழைக்கப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் என்ஜினீயரிங் டெக்னாலஜி. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தால் 1968-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்தக் கல்வி நிறுவனம். அகமதாபாத், அமிர்தசரஸ், ஔரங்காபாத், போபால், புவனேஸ்வரம், சென்னை, குவாஹாத்தி, ஹாஜிப்பூர், ஹால்டா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், இம்பால், லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் சிபெட் மையங்கள் இருக்கின்றன. இந்த மையங்களில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் படிப்பதற்கேற்ற டிப்ளமோ படிப்புகள் உள்ளன. டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி (டிபிடி), டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் மோல்ட் டெக்னாலஜி (டிபிஎம்டி) ஆகிய மூன்று ஆண்டு படிப்புகளில் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். இந்தப் படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 20. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.

 பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் (கேட், காம் உள்பட) பாடப்பிரிவில் போஸ்ட் டிப்ளமோ படிப்பு ஓன்றரை ஆண்டுப் படிப்பாகும். மெக்கானிக்கல், பிளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி, டூல்ஸ், புரடக்ஷன் என்ஜினீயரிங், மெகட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், டூல் அண்ட் டை மேக்கிங் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்த மாணவர்கள் சேரலாம். சிபெட் கல்வி நிலையத்தில் பிளாஸ்டிக் டெக்னாலஜி (டிபிடி), பிளாஸ்டிக்ஸ் மோல்ட் டெக்னாலஜி (டிபிஎம்டி) ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்த மாணவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 25. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.

பிளாஸ்டிக்ஸ் புராசசிங் அண்ட் டெஸ்டிங் பாடப்பிரிவில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியியலை ஒரு பாடமாக எடுத்து, மூன்று ஆண்டு பிஎஸ்சி பட்டம்
பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்புக் காலம் ஒன்றரை ஆண்டுகள். இப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 25. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு. இந்தப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசித் தேதி ஜூன் 10. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 17-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி ஜூலை 14. பிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 விவரங்களுக்கு: www.cipet.gov.in

source:tntjstudent wing

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...