Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 23, 2013

கடலூர் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை ஜோர்

கடலூர், : கடலூர் பகுதிகளில் சாராய விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. சாராய விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சாராய சாவு பட்டியலில் உலகை திரும்பி பார்க்க செய்தது வரலாற்று பதிவு. ஆனால் இப்பதிவு நடந்தும் கூட தொடர் சாராய விற்பனை என்பது காட்டாற்று வெள்ளம் போல் ஓடத்தான் செய்கிறது.

 மது கடத்தல், சாராய விற்பனை என குற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கென்றே செயல்படும் ஒரு பிரிவாக உள்ள கலால் துறையும், பிற காவல் துறையின் செயல்பாடுகளும் சாராய சாம்ராஜ்யத்தை கண்டுகொள்ளாமல் உள்ளதால் இதன் விற்பனை தற்பொழுது மாவட்டத்தில் ஜோராக நடந்து வருகிறது. இதிலும் மாவட்டத்தின் தலைநகர் கடலூரிலும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் சாராய விற்பனை விறுவிறுப்புடன் நடந்து வருவது மக்களை மிரள வைத்துள்ளது. கடலூர் நகரில் புதுப்பாளையம் புதுநகர், தேவனாம்பட்டினம், கெடிலம் ஆற்றுப்பகுதி, மஞ்சக்குப்பம் சுடுகாட்டு பகுதி என தொடரும் பட்டியலில் கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள சான்றோர் பாளையம், மனக்குப்பம், சுத்துக்குளம், வசந்தராயன்பாளையம், கொடிகால் நகர், வடுகபாளையம், வண்டிப்பாளையம், பச்சையாங்குப்பம், திருப்பாதிரிபுலியூர் காவல் சரகத்திற்குட்பட்ட நத்தப்பட்டு சாலை, திரு வந்திபுரம் குவாரி பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சாராய விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

சாராயம் மற்றும் புதுச்சேரி சரக்கு கடத்தலை தடுக்க கடலூர்- புதுச்சேரி எல்லையில் சாவடி, ஆல்பேட்டை, குமுதா ம்மேடு, வெளிச்செம்மண்டலம் உள்ளிட்ட இடங்களில் சோதனைசாவடிகள் அமைத்திருந்தும் மாமூல் வேட்டை தொடரத்தான் செய்கிறது. இதற்கு போலீசார் துணை போவதாக சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்று நகர மற்றும் சுற்றுப்புற பகுதியிலும் ஏட்டு முதல் உயர் அதிகாரிகள் வரை முறையாக கவனிக்கப்படுவதால்
சாராய சாம்ராஜ்யத்திற்கு தடையில்லா சான்றிதழ் மறைமுகமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இதுகுறித்து மாவட்ட காவல்துறை முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...