Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 09, 2013

மன்பஈ உலமா பேரவை துவக்கம்


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஒருங்கிணைப்புக் கூட்டம்
மன்பஈ உலமா பேரவை துவக்கம்
மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹஸரத் தலைவராகத் தேர்வு
ulama peravai1லால்பேட்டை, மே 8-தமிழகத்தின் தலைசிறந்தமார்க்க கல்விக் கேந்திரமாகவிளங்கும் லால்பேட்டை ஜாமிஆமன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் மார்க்க கல்விபயின்று வெளியேறும் மாணவர்களுக்கு மன்பஈ என்கிற பட்டம்வழங்கப்படுகிறது.
கடந்த 150 ஆண்டுகளாகமிக சிறந்த மார்க்க கல்வியைஊட்டி வரும் ஜாமிஆ மன்பவுல்அன்வார் அரபிக் கல்லூரியின்150-வது ஆண்டு விழா அடுத்தமாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக் கும்வேளையில் உலகம் முழுவதும்பரவிப் பணியாற்றும் மன்பஈஉலமாக்களை ஒன்றிணைக் கும்முகமாக மன்பஈ உலமா பேரவை துவக்க விழா 7-5-2013 செவ்வாய்க் கிழமை லால்பேட்டைஜாமிஆ மன்பவுல் அன்வார்அரபுக் கல்லூரி தாருல் தப்ஸீர்கலைக் கூடத்தில் நடைபெற்றது.ulama peravai6
பேரவை தொடக்க விழாகூட்டத்திற்கு மௌலானா முப்திஅஷ்ரப் அலி மன்பஈ தலைமைவகித்தார். மௌலானா தளபதிஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ வரவேற்றுப் பேசினார். ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்மௌலானா ஏ.இ.எம்.அப்துல்ரஹ்மான் ஹஜ்ரத் துவக்கவுரை நிகழ்த்தினார்.ஜாமிஆ முதல்வர் மவ்லானாஏ.நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத்,ஆவூர் அப்துல் ஷக்கூர் மன்பஈ,மதுரை பி.கே.என்.அப்துல் காதிர்மன்பஈ, மௌலானா ஹாமித்பக்ரி மன்பஈ, முகவை பஷீர் சேட்மன்பஈ, திருச்சி மாவட்ட அரசுடவுன் காஜி ஜலீல் சுல்தான்மன்பஈ, முகவை கவிஞர் உமர்ஜாபர் மன்பஈ, இளையாங்குடிமௌலானா முஹம்மது ராஜூக்மன்பஈ ஆகியோர் உரையாற்றினர்.பள்ளப்பட்டி மௌலானாமுஹிபுல்லா மன்பஈ துஆ செய்தார். மௌலானா முஹம்மதுஅன்சாரி மன்பஈ நன்றி கூறினார்.இந் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மன்பஈஉலமாக்கள் பங்கேற்றனர் .
நிர்வாகிகள் தேர்வு
ஜாமிஆ முதல்வர் மவ்லானாஏ.நூருல் அமீன்
மன்பஈ ஹஜ்ரத்தலைவராகவும், மௌலானாஅப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத்,மௌலானா முப்தி அஷ்ரப் அலிமன்பஈ ஹஜ்ரத் ஆகியோர்கவுரவ தலைவர்களாகவும், நீடூர்மிஸ்பாஹுல் முஹய்யதீன் அப் துல்காதர் மன்பஈ செயலாளராகவும், ஆவூர் மௌலானாஅப்துல் ஷுக்கூர் ஹஜரத்பொருளாளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
-source:Lalperexpress

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...