புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர்களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரேபியா அரசு சமீபத்தில் அறிவித்தது.
பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண்டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இவ்வகையில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம்பெற்றுள்ள பாஸ்போர்ட்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சவுதி உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
இதனால், ஜெத்தா விமான நிலையத்தில் இறங்கிய இந்தியர்கள் சிலர் சிரமத்திற்குள்ளான தாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, சவுதியில் உள்ள இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் நேற்று உள்துறை அமைச்சர் அகமது அலிசாலே-வை சந்தித்தார். இந்திய பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகத் தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதிய பாஸ் போர்ட்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை சவுதி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச் சரிடம் அவர் தெரிவித்தார். இந்த விளக்கத்தை சவுதி அமைச்சரும்
ஏற்றுக்கொண்டார். இவ்விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்தது என சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக துணைத் தூதர் சிபி ஜார்ஜ் தெரி வித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...