தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடைபெற்றது. சுமார் 5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தற்போது தேர்வு முடிவுகளுக்காக மாணவ-மாணவிகள் காத்திருக்கிறார்கள்.
தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணியில் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மதிப்பெண்கள் சரிபார்த்தல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல் போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டி முடிவடையும் தருவாயில் உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று ஏற்கனவே அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
அரசு இணைய தளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியாகும். அந்த இணைய தளங்களின் முகவரி:-
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
அரசு இணைய தளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியாகும். அந்த இணைய தளங்களின் முகவரி:-
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...