Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 13, 2013

பாகிஸ்தான் தேர்தல்: மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்கிறார் நவாஸ் ஷெரீப்

       
 பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அத்துடன் கைபல் பாக்துங்வா, பஞ்சாப், சிந்து மற்றும் பலுசிஸ் தான் ஆகிய மாகாணங்களுக் கும் தேர்தல் நடத்தப்பட்டது. 342 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பதவிகளுக்கு 4670 வேட்பாளர்களும், மாகாண சபைகளுக்கு சுமார் 11 ஆயிரம் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். பலத்த பாதுகாப்புடன் காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு நடை பெற்றது. வாக்காளர்கள் வருகையை அதிகரிப்பதற்காக வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுத லாக வழங்கப்பட்டது.

அதன்படி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங் கியது. ஆரம்பம் முதலே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பார்லிமென்டில் மெஜாரிட்டியை நிரூபிக்க, 134 இடங்கள் தேவை.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கனவே, ஆளும் கட்சியாக இருந்தது. தற்போது மீண்டும் இந்த மாகாண சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 297 இடங்களில், 188 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற முறையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, தோழமை கட்சிகளுடன் இணைந்து, ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. நவாஸ் ஷெரீப், மூன்றாவது முறையாக, பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களாக யூசுப் ரசா கிலானி, ராஜா பெர்வேஸ்
அஷ்ரப், பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட, கிலானியின் மகன், ஹைதர் உள்ளிட்டோர் தோல்வியடைந்துஉள்ளனர். கிலானியின் மற்றொரு மகன், மூசாவும் தோல்வியை தழுவியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...