சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., பி.எல்., படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அரசின் முகமையான அம்பேத்கர் பல்கலைக்கழகம் மூலம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. இந்தப் படிப்பு சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிற காரணத்தால், ஒற்றைச் சாளர கலந்தாய்வின் முறையில் நடைபெறவில்லை என்பதாலும் இதனைச் சிறப்பினமாகக் கருதி கடந்த 2010-ம் கல்வியாண்டு முதல் பி.ஏ. பி.எல்., படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...