Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 13, 2013

கர்நாடக முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் சித்தராமையா!

கர்நாடக மாநிலத்தின் 22வது முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். ஸ்ரீ கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், அந்த மாநில ஆளுநர் பரத்வாஜ், சித்தராமையவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 50 ஆயிரம் பேர் கூடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இன்று சித்தராமையா மட்டும் பதவியேற்கிறார். அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் கட்சி
சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...