காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைக்கப்பட்டதால் நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, பாப்பாக்குடி ஓடை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு பல்லாயிரம் கன அடி நீர் வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில் 960.20 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு வைக்கப்பட்டது.நீர் வரத்து அதிகரித்ததால், வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை மற்றும் சேத்தியாத்தோப்பு மதகு வழியாக 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 1,343 மில்லியன் கன அடி வரை ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.பின்னர் மழையின் தீவிரம் குறைந்தும் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக ஒரே சீரான அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
மீண்டும் மழை எச்சரிக்கை விடப்பட்டதால் ஏரியின் நீர் மட்டத்தை முற்றிலுமாக குறைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக நீர் வெளியேற்றப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 763.20 மில்லியன் கன அடியாக குறைந்ததால் நேற்று காலை 6 மணிக்கு வெள்ளியங்கால் ஓடை மதகு மூடப்பட்டது.வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால் கிராமங்களில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.நேற்று காலை முதல் மழை பெய்து வருவதால் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக ஏரிக்கு வினாடிக்கு 2,000 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. அதில் 1,921 கன அடி நீரை சேத்தியாத்தோப்பு மதகு வழியாக வெள்ளாற்றிற்கும், 74 கன அடி நீரை சென்னை குடி நீருக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.மழை தீவிரமடைந்தால் மட்டுமே வெள்ளியங்கால் ஓடை மதகை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால் வீரநத்தம், நந்திமங்கலம், எல்லேரி, சிறகிழந்தநல்லூர் உள்ளிட்ட 20 கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
good
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...