காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினரால் காவல்நிலையங்களுக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவதாக விக்கிலீக்ஸில் வெளியான தகவலை லண்டன் கார்டியன் பத்திரிகை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் அதிரடியாக பல்வேறு நாடுகளின் ரகசியங்களை அமபலப்படுத்தி வருகிறது இந்நிலையில் தற்போது இந்தியாவைப் பற்றியும் பல செய்திகள் இந்த இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குறிப்பாக காஷ்மீரில் தீவிரவாதிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடம் உண்மையை வரவழைப்பதற்காக காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அவர்களை பல்வேறு கொடுமைக்கு ஆளாக்குவதாக, விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது இதை கார்டியன் பத்திரிகை முக்கிய செய்தியாக வெளியிட்டது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதர் மூலம் இந்த செய்தி விக்கிலீக்சுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.
காஷ்மீரில் பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினர், இந்த செய்தியை அமெரிக்க தூதரிடம் தெரியப் படுத்தியுள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்மாநிலத்தை சேர்ந்த பலர் இதுபோன்று பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதை பார்த்துள்ளனர்.
இவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டும், உலோக உருளையை அவர்கள் மீது உருட்டியும், அதிவேகத்துடன் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கால்களை விரிக்கச் செய்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதை தாங்க மாட்டாமல் சிலர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுபோன்ற மனித உரிமை மீறல் செயல்கள் அதிகமாக நடப்பதாக அந்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
source:தமிழ் இஸ்லாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...