Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 08, 2010

இந்தியாவில் சேடான் டீசல் எக்ஸ்எப்பை அறிமுகப்படுத்தியது ஜாக்குவார்


பிரிட்டிஷ் பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் லாண்ட் ரோவர் நிறுவனம், இந்தியாவில் டீசல் அடிப்படையிலான லக்சுரி (சொகுசு) காரான சேடான் எக்ஸ்எப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியர் கார் பிரிவின் தலைவர் ரோஹித் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : முற்றிலும் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்ட இந்த கார், 3.0 லிட்டர் வி6 சிலிண்டரை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகவும், இந்த டீசல் காரின் விலை ரூ. 48.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இதன்மூலம், பிரிட்டிஷ் தொழில்நுட்பத்திலான காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், விற்பனை இலக்கு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில், எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த முதலில் தி்டடமிட்டுள்ளதாகவும், கடந்த நிதியாண்டில் 242 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும், தற்போதைய அளவில் 3 டீலர்ஷிப்கள் உள்ளதாகவும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 10 புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்திய 5.0 லிட்டர் பெட்ரோல் எக்ஸ்எப் மற்றும் சூப்பர்சேஞ்ச்டு எக்ஸ்எப்ஆர் உள்ளிட்ட கார்களுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு உள்ளதாகவும், லேண்ட் ரோவர் நிறுவன தயாரிப்புகளை முற்றிலும் இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்யும் திட்டம் இருப்பதாகவும், இது 2011ம் ஆண்டின் இறுதியில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ‌அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌர்சே:DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...