பருவமழை காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் காய்கறி விளைச்சல் பாதித்தது. இதனால் தக்காளி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் ஒருமாதமாக உயர்ந்தன.
பெரிய வெங்காயத்தின் விலை மட்டும் கிலோ ரூ.40, ரூ.50 என்று உயர்ந்தது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன்விலை மேலும் உயர்ந்தது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.70, ரூ.80 என்று விற்கப்படுகிறது. சில்லரையில் ரூ.100 வரை விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் வெங்காய பயன்பாட்டை கணிசமாக குறைத்து விட்டனர். ஆனியன் தோசை, ஆனியன் பச்சடி போன்றவை ஒருசில ஓட்டல்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க கவுரவ தலைவர் ரவி கூறியதா வது:-
38 கிலோ வெங்காய மூட்டை ரூ.4500- க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.100 எட்டுகிறது. இதனால் உணவு பொருட்களின் விலையை திடீரென உயர்த்த இயலாது. ஆனால் வெங்காயம் பயன்படுத்தக்கூடிய சாம்பார், தோசை போன்றவற்றில் குறைத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனியன் பச்சடி நிறுத்தப் பட்டுள்ளது. ஒருவாரம் வரை விலையேற்றத்தை தாக்கு பிடிக்கலாம். அதற்குமேலும் உயருமானால் நஷ்டத்தை தாங்க முடியாது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளி நாடுகளில் இருந்து வெங்கா யத்தை இறக்குமதி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: மாலைமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...