புதுடில்லி : விண்ணை முட்டும் வெங்காய விலை, திணற வைக்கும் தக்காளி என அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது . இந்நிலையில் டில்லியில் இன்று கூடும் அமைச்சர்கள் குழு அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறது. சர்க்கரை மீது இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. வெங்காயம், தக்காளி, பூண்டு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் டிசம்பர் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 12.13 சதவீதமாக அதிகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
thanks:dinamalar
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...