அமெரிக்க வான் தாக்குதலில் மகனை இழந்த பாகிஸ்தானியர் ஒருவர் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நட்ட ஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளார்.
அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினரின் தாக்குதலினால் தமது மகன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்து குறித்த பாகிஸ்தானிய பிரஜை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்.
வடக்கு வரிகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த காரீம் கான் என்பவரே இவ்வாறு வழக்குத் தாக்கல செய்யத் தீர்மானித்துள்ளார்.
வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக குறித்த நபரின் சட்டத்தரணி பாகிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அமெரிக்க படையினர் தமது வீட்டின் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு தீவிரவாதியும் தமது வீட்டில் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜை ஒருவர் முதல் தடவையாக அமெரிக்கப் படையினரிடம் நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்களும், தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
சுதந்திர ஊடகவியலாளரான காரீம் கான் என்பவரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தமது வீட்டில் தீவிரவாதிகளோ வெளிநாட்டுப் பிரஜைகளோ இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source:globaltamil
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...