புதுடெல்லி,டிச.28:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ மீண்டும் விசாரணை நடத்த உள்ளது.
விசாரணைத் தொடர்பாக இவர் ஆஜராக்கிய ஆவணங்களை பரிசோதித்து வருவதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கா மஸ்ஜித் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு இந்திரேஷ் குமார் பண உதவி செய்ததாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் இந்திரேஷ் குமாரிடம் அவருடைய வங்கிக் கணக்குகளைக் குறித்த ஆவணங்களை ஆஜராக்க சி.பி.ஐ உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் ஆஜராக்கிய ஆவணங்களை சி.பி.ஐ பரிசோதித்து வருகிறது. மேலும் இதுத்தொடர்பாக கூடுதல் ஆவணங்களை ஆஜர்படுத்த இந்திரேஷ் குமாரிடம் கோரப்படும் எனவும், மீண்டும் அவரை விசாரணை நடத்தவேண்டியுள்ளது எனவும் சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவாமி அஸிமானந்தா சி.பி.ஐயினால் கைதுச் செய்யப்பட்டிருந்தான். அஸிமானந்தாவிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்புகளில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.
இந்திரேஷ் குமாரை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் விசாரணை நடத்தவுள்ளது. முதலில் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அஸிமானந்தாவிடம் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் விசாரணை நடத்தும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத் தூது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...