கடந்த மூன்று நாட்களாக, உலகம் விழித்துக் கொள்வது விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் தகவல்களுக்காகத்தான் என்று சொல்லலாம். கடந்த ஜூலை மாதம் ஈராக் மற்றும் ஆப்கான் குறித்து அமெரிக்க ராணுவத்தின் ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியைத் தந்தது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளுடன் கடந்த ஆண்டுகளில் பரிமாறிக் கொண்ட ரகசியத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது விக்கிலீக்ஸின் கையில் சிக்கியுள்ளன. இத்தகவல்களில் மிகவும் ரகசியமானவை sவீஜீக்ஷீஸீமீt என்ற இணையதளத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட மூன்று லட்சம் பேருக்கு இந்த இணையதளத்திற்குள் செல்ல அனுமதி உண்டு. அவர்களில் ஒருவர் மூலமாகவே இந்த ரகசிய ஆவணங்கள் விக்கி-லீக்ஸின் கைகளுக்குள் சிக்கியுள்ளன.
மொத்தம் 2,51,287 ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றில் 3,000 ஆவணங்கள் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர-கத்திலிருந்து அனுப்பப்பட்டவை என்று கூறும் விக்கிலீக்ஸ், அவற்றில் 243 ஆவணங்களை மட்டும் இதுவரை வெளியிட்டுள்ளது. மீதி ஆவணங்களைச் சிறிது சிறிதாக அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் வெளியிட விக்கிலீக்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜுலியன் அசான்ஜ் தலைமையில் நடைபெறும் விக்கிலீக்ஸ் நிறுவனத்-திற்கென்று எந்த அலுவலகமும் கிடையாது. இந்நிறுவனத்திற்குத் தகவல்கள் தருபவர்கள் யாரென்று வெளியுலகிற்குத் தெரியாது. இந்நிறுவனத்திற்கு பணியாளர்கள், நிர்வாகிகள், தலைவர் என சுமார் 100&க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அசான்ஜ் மீது நடவடிக்கை எடுக்க நடந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளியிடப்படுவது குறித்து அமெரிக்கா கலவரம் அடைந்துள்ளது. அந்த ஆவணங்களை வெளியிடக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அரங்கில் அமெரிக்காவின் வெளிப்படையான நடவடிக்கைகளுக்குப் பின்னே திரைமறைவில் அது நடத்தும் நேர் எதிரான நாடகங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சிறு தகவல்கள் உள்ளே பொதிந்திருக்கும் மிக பிரமாண்டமான ஐஸ்கட்டியின் நுனி மட்டுமே. ஆனால், இந்த ஒரு சோறு, ஒரு பானைச் சோற்றுக்கு பதமாக அமைந்துள்ளது. தான் உறவு கொள்ளும் மற்ற நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அமெரிக்கா உள்ளூர எவ்வளவு துச்சமான கருத்தைக் கொண்டுள்ளது என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது. மற்ற நாட்டு தலைவர்களை ஆல்பா நாய், ஹிட்லர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற பட்டப்பெயர்களை அமெரிக்க அதிகாரிகள் சூட்டியுள்ளது தெரிகிறது.
தனது நேட்டோ சகாவான பிரிட்டன், ஆப்கான் யுத்தத்தில் கடைப்பிடித்து வரும் சாதகமற்ற போக்கு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கடுமையான விமர்சனம் வைத்துள்ளனர். வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் தங்கள் அதிகாரிகளை அந்நாட்டு தலைவர்களை உளவு பார்க்கச் சொல்வதும், ஐ.நா. அமைப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் உள் விவகாரங்களை மோப்பம் பிடிக்கும்படி அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனே கேட்பது மானக்கேடான விஷயம்.
அரபு நாடுகளில், தனது எண்ணெய் நலத்தைப் பாதுகாக்க அமெரிக்கா கடைப்பிடிக்கும் தில்லுமுல்லுகளும் இப்போது வெளியாகியுள்ளன. அரபு நாடுகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க அவர்களிடையே உள்ள ஷியா, சன்னி பிரிவுகளிடையே அமெரிக்கா தொடர்ந்து உருவாக்கி வரும் பகைமையை இந்த ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே கடுமையான பிளவு உள்ளதாக இந்த ஆவணங்களில் தெரிவிக்கப்-பட்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை, சவுதி அரசர் அப்துல்லா கோரு-வதாகத் தெரிவிக்கப்-பட்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் குறித்து சவுதி மன்னர் முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்களும் வெளிவந்துள்ளன. இவற்றை பாகிஸ்தான் அரசும் ஈரான் அதிபரும் மறுத்துள்ளனர். அரபு நாடுகளிடையே உள்ள நல்லுறவைச் சீர்குலைக்க அமெரிக்காவே திட்டமிட்டு இந்த ஆவணங்களை வெளியிடுவதாக ஈரான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், சவுதி மன்னர் இதுவரை இந்த ஆவணங்கள் குறித்து வாய் திறக்கவில்லை.
இந்தியா குறித்து இரண்டு தகவல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. ‘இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராகத் தங்களை தாங்களே முன்னிறுத்தி உள்ளன’ என்று ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அப்படியெனில், இந்தியாவின் நிலைப்பாட்டை மற்ற நாடுகள் எவையும் ஆதரிக்கவில்லையா? இந்தியாவிற்கு அப்பதவியைப் பெற்றுத்தர ஒபாமா முயற்சிப்பதாகக் கூறியது பொய்யா? அடுத்து ‘துருக்கியால் கூட்டப்பட்ட ஆப்கான் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள& பாகிஸ்தானைக் காயப்படுத்தக்கூடாது என்பதற்காக & இந்தியாவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை’ என்ற தகவல் இந்தியாவை மேலும் கோபமூட்டும்.
அமெரிக்கா தந்த அணு உலைகளை பாகிஸ்தான் அரசு யுரேனியம் செறிவூட்-டலுக்குப் பயன்படுத்துவதால், அணுக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்ற நிலையில், அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற போது, பாகிஸ்தான் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறி அந்த அரசு அதற்கு மறுப்பு தெரிவித்ததை ஒட்டி, அமெரிக்கா அம்முயற்சியைக் கைவிட்டது என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம், பாகிஸ்தானின் அணு ஆயுதத் தயாரிப்புகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஈரானுக்கு ஒரு நீதி, பாகிஸ்தானுக்கு ஒரு நீதியா?
சீனாவில் கூகுல் இணையதளம் மூலம் கருத்துச் சுதந்திரத்தை அந்நாட்டு மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்க கூகுலை முடக்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியதாகவும், ஈரானுக்கு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் பொருட்களை வடகொரியா, சீனா மூலம் கடத்த அவ்வரசு அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைச் சீனா கடுமையாக மறுத்துள்ளது.
இந்த ஆவணங்கள் மூலம் ஒரு தகவல் தெளிவாகத் தெரிகிறது. உலக நாடுகள் அமெரிக்க ஆணைக்கு உட்பட்டு நடக்கும் காலம் மலையேறிவிட்டது. இனியும் அந்நாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில், அமெரிக்கா பீதியுடன் செயல்படுவது தெரிகிறது.
இந்த ஆவணங்கள் மூலம், தகவல் உரிமைச்சட்டம் உலக அரங்கில் அரங்-கேறியுள்ளது. விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தியுள்ள இந்த ஆவணங்களால் ஒட்டு-மொத்த உலகமும் ஒருவித அதிர்ச்சியை அனுபவித்திருக்கிறது. அதேசமயம், இனிமேலும் அரசுகள் வெளிப்படையின்றி மக்களுக்குத் தெரிவிக்காமல் ரகசிய நடவடிக்-கைகளை மேற்கொள்ள முடியாது என்ற பேருண்மையை அதே உலகத்திற்கு எடுத்தும் சொல்லியிருக்கின்றன இந்த ஆவணங்கள்!
thanks :tamilagaarasiyal.(கலை)
டிசம்பர் 09, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...