எண்ணெய் வளம் கொழிக்கும் குவைத்தில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் டோனி பிளேயரின் ஆலோசனை மையம் £27 மில்லியன் வருமானமீட்டி வருவதாக் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏற்கனவே டோனி பிளேயரின் வருமானம் குறித்து பல சர்ச்சைகள் தொடர்வதால் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டௌனிங் ஸ்ட்ரீட்டை விட்டு வெளியேறிய பின் £20 மில்லியனாக இருந்த டோனி பிளேயரின் வருமானம் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலுக்குப் பின் £40 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12 மில்லியன் தினார்களுக்கும் மேலாக குவைத்தில் இயங்கும் டோனி பிளேயர் நிறுவனம் லாபமீட்டி வருகிறது எனக் கசிந்துள்ள தகவல்களை டோனி பிளேயரின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் இந்த நிறுவனம் பலரின் பங்களிப்பில் சில வருடங்களாகவே இயங்கி வருவதாகவும் மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தையின் போது வளைகுடா நாட்டுத் தலைவர்களுடன் சிறந்த உறவை பேணுவதற்காக ஏற்படுத்தப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
source:CNN
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...