Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 14, 2010

சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு

சிதம்பரத்தில் 65 லட்சம் ரூபாய் செலவில் துவங்கிய மேலவீதி அகலப்படுத்தும் பணி மழை காரணமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா தலமான சிதம்பரம் நகரை அழகுபடுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருவழிச்சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதி, போல்நராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம் - கவரப்பட்டு, சிதம்பரம் - டி. எஸ். பேட்டை ஆகிய சாலைகள் பல்வழிச்சாலைகøளாக மாற்றப்படுகிறது.

முதல்கட்ட பணியாக சிதம்பரம் மேலவீதி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியது. கடந்த மாதம் 24ம் தேதி இந்த பணி துவங்கியது. மேல வீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்து கீழ்புறமாக சாலையோராத்தில் இரண்டு அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. பணி துவங்கியதும் மழை பெய்ததால் பணிகள் தடைபட்டது. தற்போது மழை விட்டு வெயில் காய்ந்து வரும் நிலையில் கூட பணிகள் துவக்கப்படவில்லை. இதனால் சாலையோர பள்ளத்தில் இரவு நேரங்களில் வாகனங்கள் வருபவர்கள், நடந்து செல்பவர்கள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே பொதுமக்களுக்கு பாதிப்பின்றி சாலை அகலப்படுத்தும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...