Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 09, 2012

அமெரிக்காவை மிரட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வடகொரியா தயாரிப்பு .

அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை வடகொரியாவில் இருந்து ஏவி அமெரிக்காவை தாக்க முடியும். ஏவுகணையின் சோதனையை கடந்த ஏப்ரல் மாதம் வடகொரியா நடத்தியது. ஆனால் ஏவுகணை ஏவப்பட்ட சில வினாடிகளில் அது வெடித்து சிதறியது. இதனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது. மீண்டும் இந்த வாரத்தில் ஏவுகணை சோதனையை நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

 எந்த நேரத்திலும் அந்த சோதனை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பு வழியாக பாய்ந்து செல்லலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி தங்கள் நாட்டு பகுதி வழியாக வந்தால் அதை சுட்டு வீழ்த்த ஜப்பான் தயாராக உள்ளது. அதற்காக எம்.ஐ.எம்.-104 என்ற பேட்டிரியாட் வகை ஏவுகணைகளை தயாராக நிறுத்தியுள்ளது. 4 ஏவுகணைகளை ஜப்பானில் தெற்கு எல்லைப் பகுதியிலும் 3 ஏவுகணைகளை ஜப்பான் தலைநகரம் டோக்கியோ அருகிலும் நிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டின் ஏவுகணைகளை வானத்திலேயே இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாகும்.

  இதுதொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் சதோஷி மோரி மோட்டோ வெளியிட்டுள்ள செய்தியில் ஜப்பான் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த
ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

-மாலைமலர் 

1 கருத்துகள்:

Tamil News Service சொன்னது…

நல்ல பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி.

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...