சிதம்பரம்,: சிதம்பரத்தில் அனைத்து கட்சி கூட்டம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி னார். நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர காங்கி ரஸ் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் தியாகு, சேகர், தேமுதிக ரவி, சமாஜ் வாடி சார்பில் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ராஜா, ரமேஷ்பாபு, வெங்கடேசன், விஜயகுமார், கற்பனைச்செல்வம், காமராஜ், மாதவன், ராதாகிருஷ்ணன், முருகப்பன், கண்ணன், ஜீவா உட்பட பலர் கலந்து கொண் டனர். காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதியில் சம்பா நடவு செய்யப்பட்ட பயிர் காய்ந்து கருகி வருகிறது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ. 10 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும். பம்புசெட்டுகளு க்கு 12 மணி நேரம் மும் முனை மின்சாரம் வழங்க வேண்டும், சம்பா பயிரை காப்பற்ற கோரி வருகிற 7ம்தேதி டெல்டா பகுதியில் பந்த் நடத்தப்பட உள்ளது. அன்று சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் பந்த் நடத்தி சிதம்பரம் தலைமை தபால்நிலையம் முன் மறியல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
-source:Dinakaran
-source:Dinakaran
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...