Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2012

சிதம்பரம் பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

சிதம்பரம், : சிதம்பரம் புறவழிச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் பகுதியில் நடராஜர் கோயில், புவனகிரி ராகவேந்திரர் கோயில், பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களும், சுற்றுலா மையமும் உள்ளது.

இதனால் சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர், கடலூர் பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் இந்த நகருக்கு வந்து செல்கின்றனர். சிதம்பரம் வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட நவகிரக கோயில்கள், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கும்பகோணம், திருவாரூர் பகுதியில் உள்ள கோயிலை பார்ப்பதற்கு சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக செல்கின்றனர். இதனால் புறவழிச்சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இந்த சாலை புதிதாக போடப்பட்டு இருப்பதால் கார், வேன், பேருந்து ஓட்டுனர்கள் வேகமாக ஓட்டி செல்கின்றனர். இந்த புறவழிச்சாலையில் கண்ணங்குடி ரோடு செல்லும் இடத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் சாலை பிரியும் பகுதி வரை சுமார் 1 கிமீ தூரம் பல இடங்களில் சாலை பெயர்ந்தும், பெரிய பள்ளங்களும் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த இடத்தில் நிலை தடுமாறிவிடுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் நிலை தெரியாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. அதிக உயிரிழப்பு ஏற்படும் முன் புறவழிச்சாலையை பராமரித்து வரும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  சிதம்பரம் நகரம் எப்போதும் போக்குவரத்து மிகுந்த சுற்றுலா நகரம். தினம்தோறும் இங்கு ஆயிரக்கணக்காண சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தென்மாவட்டத்தை சென்னையுடன் இணைக்கும் முக்கிய நகரமாக இது விளங்கி வருகிறது. சிதம்பரத்தில் இருந்து வல்லம்படுகை வரையிலான தேசிய நெஞ்சாலை போக்குவரத்து செல்லமுடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் உள்ள ஏழு கம்மா மதகின் தடுப்புகள் உள்ளிட்ட 7 சிறுபாலங்களின் மதகுகளின் தடுப்புசுவர் இடிந்து விழுந்து விட்டது. இதனால் அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இது தேசிய நெடுஞ்சாலையாக இருந்தும் நிதிஆதாரம் இல்லை என்று காரணம் காட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாமல்
மதகுகளின் கைப்பிடி சுவர் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுபற்றி தினகரனில் செய்தி வெளியானது. மேலும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த சாலையில் உள்ள சிறுபாலங்களில் தடுப்புசுவர் கட்டும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதிலும் ஏழுகம்மா மதில் மட்டும் இருபுறமும் இரும்பிலான கிரில் அமைத்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் குழிகள் மற்றும் பள்ளங்களில் தார்போடும் பணியும் நடந்து வருகிறது.

-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...