Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 04, 2012

நரேந்திர மோடிக்கு விசா தரவே கூடாது.அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்

வாஷிங்டன்: குஜராத் கலவரப் புகழ் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா தரக் கூடாது என்று 25 அமெரிக்க எம்.பிக்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை வலியுறுத்தியுள்ளனர் இதனால் மோடி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. 2002ல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமான மோடி, அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நிவாரணம் தரவில்லை. தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு இன்னும் சரிவர தண்டிக்கப்படவில்லை என்ற காரணங்களைக் கூறி ஹில்லாரியிடம் இந்த கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த எம்.பிக்கள் ஹில்லாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி இந்தியாவில் பெரிய பதவியை (பிரதமர் பதவி) குறி வைத்து நகர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு விசா தர முடிவெடுத்தால் அது அவருக்கு சாதகமாக அமையும். மேலும் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க விடாதபடி செய்ய வழிவகுத்து விடும். மேலும் விசாரணை மற்றும் வழக்குகளுக்கு அவர் மேலும் குந்தகம் செய்யும் நிலை உருவாகி விடும் என்று அவர்கள் கூறியுள்ளனர். நவம்பர் 29ம் தேதி இந்தக் கடிதத்தை அவர்கள் ஹில்லாரிக்கு எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோ பிட்ஸ் மற்றும் பிராங்க் உல்ப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இருவரும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தக் கடித விவரத்தை வெளியிட்டனர்.

இந்த கடிதத்தில் முக்கிய எம்.பிக்களான ஜான் கான்யர்ஸ், டிரென்ட் பிராங்க்ஸ், ஜேம்ஸ் மோரன், மைக்கேல் ஹோண்டா, பில் பாஸ்சரல், பார்பரா லீ, எட்வர்ட் மார்க்கி, ஜிம் ஜோர்டன், டேன் பர்டன், மைக்கேல் கோபுவானா, டோக் லாம்போர்ன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். 2002 கலவரத்திற்குப் பின்னர் மோடிக்கு விசா தர அமெரி்ககா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து அரசு, மோடிக்கு விசா தருவது
குறித்துப் பரிசீலிப்போம் என்று கூறியிருந்த நிலையில் அமெரிக்காவும் விசா தர அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் ஹில்லாரிக்கு இப்படி ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர் அமெரிக்க காங்கிரஸ் எம்.பிக்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...