Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2012

இந்தியர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்! சர்வே

லண்டன்: உலகிலேயே இந்தியர்கள்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அவர்கள் ஆரோக்கியம் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவ பத்திரிக்கையான லான்செட், 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 நிறுவனங்களைச் சேர்ந்த 486 பேரைக் கொண்டு ஆயுட்காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

1970 ல் இருந்து 2010 ம் ஆண்டு வரை பிறந்தவர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகையில் சராசரியாக ஆண்களின் ஆயுள் 15 வருடங்களும், பெண்களின் ஆயுள் 18 வருடங்களும் அதிகரித்துள்ளது. உலகின் பிற நாட்டினரை விட இந்தியர்களின் ஆயுள் காலம் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் 40 வயதிற்கும் மேல் வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 ஆரோக்கியம் குறைவு:
  இந்தியர்களின் ஆயுள் அதிகமாக இருந்தாலும் வயோதிக காலங்களில் குறைவான ஆரோக்கியத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய ஆண்கள் தங்களின் ஆயுட்காலத்தில் 54.6 வயது வரை நல்ல ஆரோக்கியதுடன் இருப்பதாகவும், கடைசி 9 வருடங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்திய பெண்கள் தங்களின் 57.1 வருடங்கள் வரை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும், தங்களின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் தங்களின் இறுதி 10 அல்லது 10.4 வருடங்கள் குறைவான ஆரோக்கியத்தை கொண்டுள்ளனராம். 

சுற்றுச்சூழல் மாசுபாடு:
 இந்திய வீடுகளில் எரிக்கப்படும் மரங்கள், கரிகள், சாணம் உள்ளிட்டவைகளே இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக
இருக்கிறதாம். காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு உயர் ரத்தஅழுத்த நோயும் ஏற்படுகிறதாம்.
-oneindia 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...