அங்காரா:உலக போலீஸ் வேடமணிந்து திமிரான கொள்கைகளை பின்பற்றினால் சோவியத் யூனியன் போலவே அமெரிக்காவும் உடைந்து போகும் என்று முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்காயேல் கார்பச்சேவ் கூறியுள்ளார். மேற்காசியா மற்றும் கருங்கடல் பகுதியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இஸ்தான்புல்லில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் கார்பச்சேவ்.
அவர் தனது உரையில் கூறியது:தொடர்ச்சியாக செய்த தவறுகளின் மூலமே சோவியத் யூனியன் உடைந்து போனது. இந்த முட்டாள் தனத்தை அமெரிக்காவும் பின்பற்றினால்சோவியத்தின் கதிதான் ஏற்படும்.
ஆட்சியில் இருக்கும் பொழுது இஸ்லாமிய பண்பாடுகளை அழிக்கவே சோவியத் ஆட்சியாளர்கள் முயன்றனர். பனிப்போர் காலத்தில் உலக சக்திகள் மதங்களை ஆயுதமாக பயன்படுத்தினர். சோவியத் யூனியனின் ஆப்கான் ஆக்கிரமிப்பு மன்னிக்க முடியாத குற்றமாகும். அமெரிக்கா தற்போது அந்த தவறை தொடர்கிறது. இவ்வாறு கார்பச்சேவ் கூறினார்.
-thoothuonline

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...