காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகள் வீராணம் ஏரி மூலம் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் வீராணம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டது. அதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை தாமதமாக தொடங்கினர்.
இந்நிலையில் ஏரியில் கொள்ளளவு குறைந்ததால் ஏரி மூடப்பட்டது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வந்தன.
வழக்கமாக ஆண்டுக்கு 4 முறை ஏரி நிரம்பும், ஆனால் அந்த ஆண்டு 1 முறை கூட நிரம்ப வில்லை. இந்நிலையில் விவசாயத்திற்கு தண்ணீர் தராமல் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெய்வாசல், திருநாரையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ள லால்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொதுப்பணித்துறை அலுவலர் தில்லை கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இன்று இரவு 8 மணிக்குள் விவசாயத்திற்கு வீராணம் ஏரி திறக்கப்படவில்லை என்றால் மீண்டும்
போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.
-Dinakaran.com

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...