சென்னை, டிச. 18- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்தது.
தேர்வு பயம் இல்லாமல் பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக காலாண்டு, அரை ஆண்டு தேர்வுகளையும் பொதுத் தேர்வுபோல நடத்த திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. அரசு தேர்வுத்துறை தயாரித்துள்ள வினாத்தாள்களை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு போலவே காலாண்டு, அரையாண்டு தேர்விற்கும் வினாத்தாள் படிக்க 10 நிமிடமும், விடைத்தாளில் பதிவு எண் போன்ற விவரங்களை எழுத 5 நிமிடமும், மொத்தம் 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு 2 1/2 மணி நேரமும், பிளஸ்-2 தேர்வு 3 மணி நேரமும் நடக்கிறது. தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் நாளை தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19-ந்தேதி தொடங்கி ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இடையில் 23-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறை விடப்படுகிறது.
பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரை நடக்கிறது. வருகிற 22-ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்கும் தேர்வுக்கு பிறகு 23-ஆம் தேதி முதல் 1-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2-ஆம் தேதி தொடங்கும் தேர்வு 10-ஆம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வை 10 லட்சத்து 75 ஆயிரம் பேரும், பிளஸ்-2 தேர்வை 9 லட்சம் பேரும்
எழுதுகிறார்கள். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அரையாண்டு தேர்வை நடத்துகிறார்கள். இதற்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து அனைத்து கல்வி மாவட்டத்திற்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
-விடுதலை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...