Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 04, 2012

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு முக்கியத்துவம்; அமானதுல்லாஹ் கான் விஷயத்தில் அலட்சியம்!

அன்னா ஹசாரேவின் "ஆடம்பர" உண்ணாவிரதத்துக்கு ஆரவாரத்துடன் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள், அணிவகுத்து நின்ற அரசு இயந்திரங்கள், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதை கண்டித்து, ஒரு வாரமாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அமானதுல்லாஹ் கான் குழுவினரை கண்டுக்கொள்ளவில்லை. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்வதை கண்டித்தும் - அவர்களை விடுதலை செய்யக்கோரியும், 26/11 முதல், டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கிய "லோக் ஜனசக்தி கட்சி"யின் பொதுச்செயலார் அமானத்துல்லாஹ் கான் உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்களின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதங்களை மேற்கொண்டபோது, நிறைவேற்ற சாத்தியமே இல்லாத பல கோரிக்கைகளை முன் வைத்தாலும் - ஆளும் வர்க்கம் அஞ்சி நடுங்கி பல காரியங்களை செய்து முடித்துவிட்டு ஹசாரேவிடம் மண்டியிடுவதை பார்த்து வருகிறோம். ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்து நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தை அரசு அலட்சியப்படுத்துவத்தால், முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர். மேலும், முஸ்லிம்கள் மீடியாக்களின் மீது கொண்டுள்ள கோபமும் நியாயமாகவே படுகிறது. ஹசாரேவின் உண்ணாவிரத பந்தலை சுற்றி-சுற்றி வந்த ஊடகங்கள், மணிக்கொருறு முறை சூடான செய்திகள் கொடுத்துக்கொண்டிருந்த
எலெக்ட்ரானிக் மீடியாக்கள் போன்றவை, முஸ்லிம்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும்.
source:Asia nanban

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...