Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 05, 2012

காட்டுமன்னார்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல்!!

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கிராமங்கள் அதிகம் உள்ளதால் கொசுக்களின் உற்பத்தி அதிகளவில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்தும் கொசுக்களை அழிக்க முடியவில்லை. கிராமங்களில் குப்பைகள் மலைபோன்றும், கழிவு நீர் குளம் போலவும் தேங்கியும் காணப்படுகிறது. இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் கால்நாட்டாம்புலியூரை சேர்ந்த செல்வராணி, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கல்யாணசுந்தரம், உத்திராபதி, வீராணந்தபுரத்தை சேர்ந்த அறிவழகன், அழிஞ்சிமங்கலத்தை சேர்ந்த ஐயப்பன், மற்றும் துர்காதேவி, சத்யா என பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், பெற்று வருபவர்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை கூறினால் அசிங்கம் என்று நினைத்து வெளியில் கூற முடியாமல் ரகசியமாக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் அறியாமையால் டெங்கு காய்ச்சல் பரவல் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏற்பட்டுள்ள அறியாமையை போக்கி சிகிச்சைக்கு தயார் படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 டெங்கு விழிப்புணர்வு சேவை!
 கடலூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து டெங்கு நோய் தடுப்பில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்த புதிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன் முதல்கட்டமாக டெங்கு விழிப்புணர்வு சேவை பணியில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் திரு முகம் தலைமை தாங்கினார். மலேரியா தடுப்பு அலு வலர் கஜபதி சிறப்புரையாற்றினார். இதில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

ஒவ் வொரு வாரமும் மாணவ, மாண விகள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொது மக்களுக்கு டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு தடுப்பது எப்படி எனவும், அதை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்து
அதனை அட்டவணையில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. டெங்கு நோய் தடுப்பில் சிறப்பாக பணியாற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுடது.
-source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...