காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வருவாய், காவல், சுகாதார துறைகள் சார்பில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை அழித்து வருகின்றனர். மேலும், உரிய பராமரிப்பு இன்றி டெங்கு கொசு புழுக்களை உற்பத்தி செய்து வரும் இடங்களை கண்டறிந்து சீல் வைக்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளனர்.
வருவாய் துறை அலுவலர்கள் வீடுகள் தோறும் சென்று பார்வையிட்டனர். வருவாய் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் சென்ற குழுவினர் ஒரு ஹாலோபிளாக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டதில் கொசு உற்பத்தி ஆவதற்கான புழுக்கள் இருந்ததால் சீல் வைத்தனர். இதில் சுகாதார அலுவலர் குழந்தை வேலு, கிராம நிர்வாக அலுவலர் ராஜன்பாபு, ஊராட்சி தலைவர் மஞ்சுளா ஆகியோர் இருந்தனர். முட்டத்தில் வருவாய் துறை அலுவலர் ராமலிங்கம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரூரில் அலுவலர் புகழேந்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசு உற்பத்தியாகும் இடங்களை இனம் கண்டறிந்து வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் துணை தாசில்தார் ஸ்டாலின் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பிச்சபிள்ளை, காவல் துறை உதவி ஆய்வாளர் நம்பியார் ஆகியோர் சென்று பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.
இதில் பெரிய குளம் அருகே இருந்த பஞ்சர் கடை, ரெட்டியார் ரோட்டில் செயல்பட்ட டிஎஸ்எம் திருமண மண்டபத்தை கொசு உற்பத்தி ஆகுவதற்கான சூழல் உள்ளதாக கூறி சீல் வைத்தனர். தொடர்ந்து
அலுவலர்கள் கண்காணித்து வருவதால் பொது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-Dinakaran

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...