தமிழ்நாட்டில் தற்சமயம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.இந்த காய்ச்சல் ஏடிஸ் என்று சொல்லப் படுகின்ற கொசுக்கள் மூலமாக ஏற்படுகிறது.இந்த டெங்கு காய்ச்சலைத் தடுக்க வேண்டுமெனில் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க வேண்டும் அல்லது கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதையும் மீறி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் டெங்கு தடுப்பு கசாயம் மற்றும் மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இது பகுத்தறிவுக்கு ஒத்தது. அறிவியலுக்கும் உட்பட்டது. ஆனால் தமிழக அரசு இந்த இரண்டுக்கும் ஒத்து வராத ஒரு கேலிகூத்தான செயலைச் செய்து டெங்கு காய்ச்சலுக்கு பரிகாரம் காண முயற்சித்துள்ளது.
அது என்ன தெரியுமா? மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் சங்பரிவார அமைப்புக்களான விஸ்வ ஹிந்து பரிசத், பாரத் ஹெரிடேஜ் பவுண்டேசன், கோவர்த்தன் அறக்கட்டளை இந்து மாணவர் சங்கம், காஞ்சி சங்கராச்சாரியின் ஜன கல்யாண் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு மிருத்யஞ்சய யாகம், தன்வந்திரி யாகம் ஆகிய யாகங்களை மதுரை அரசு மருத்துவமனையின் 62-வது வார்டு மனநலப்பகுதி அருகே உள்ள காளியம்மன் கோவில் முன்பு வைத்து நடத்தியது. படம்: உணர்வு அதிகாலை 4 மணிக்கு துவங்கிய இந்த யாகம் 3 மணி நேரம் தொடர்ந்து நடந்தது. இந்த யாகங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள், நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் 5 கலசங்களில் இருந்த நீரை எடுத்து டெங்கு காய்ச்சலுக்கான 4 சிறப்பு வார்டுகள் மற்றும் டெங்கு அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு போய் தெளித்தனர். இப்படிச் செய்தால் டெங்கு பரவாது என்று மதவாதிகள் நம்பலாம். மருத்துவர்களும், தமிழக அரசும் நம்பலாமா?
என்பதே நமது கேள்வி.
மனிதனின் அறிவை மூட நம்பிக்கை என்ற இருள் சூழ்ந்துள்ளது.இந்த மூடநம்பிக்கை அகலாத வரை மெத்தப் படித்த மருத்துவர்களும் இது போன்ற காரியத்தைத்தான் செய்வார்கள். இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி 5678). டெங்குவை ஏடிஸ் கொசுக்கள் உருவாக்குகின்றன. இந்த ஏடிஸ் கொசுக்களின் லார்வா பருவ முட்டைகளை தவளைகள் உண்கின்றன. அதனால் அதிக தவளைகளை நீர் நிலைகளில் வளர்த்து, கொசு வளர்ச்சியைத் தடுக்கலாம். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை ஒழிக்கலாம். இ;நத முறையை தமிழக அரசு பின்பற்றினால் அதில் குறை காண முடியாது. சித்த வைத்தியத்தில் நில வேம்பு கசாயம் என்ற மருந்து இருக்கிறது. இது டெங்கு பாதிப்பை குறைக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த கசாயத்தை தமிழக அரசு ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் விலையில்லாமல் வழங்கி வருகிறது. தமிழக அரசின் இந்த சேவையிலும் யாரும் குறை காண முடியாது. அதுபோல் ஆங்கில மருத்துவத்தில் ரத்த தட்டையணுக்களை ஏற்றி சிகிச்சை தருகிறார்கள். இந்த சிகிச்சையையும் தமிழக அரசு தருகிறது. இதுவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.
இப்படி டெங்குவை ஒழிக்க அறிவியல்பூர்வமான நடவடிக்கையை எடுக்கும் தமிழக அரசு அதோடு சேர்த்து யாகம் வளர்த்து மூட நம்பிக்கையை அதிகரிக்கும் இந்த செயலைத் தான் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழக அரசு ஒரு மதச்சார்பற்ற மாநில அரசு.இந்த அரசு மதச்சார்பான யாகம் வளர்ப்பது மதச் சார்பின்மைக்கு எதிரானதாகும். அரசு இடங்களில் கோவில் இருக்கக் கூடாது. அவ்வாறு அத்துமீறி கட்டப்பட்டுள்ள கோவில்களை இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் எத்தனையோ தீர்ப்புகளை
வழங்கி விட்டது. நீதிமன்றங்களின் இந்த தீர்ப்பை மதித்து அரசு நிலத்தில் உள்ள சட்டவிரோத கோவில்களை அகற்ற வேண்டிய தமிழக அரசு,அந்தக் கடமையைச் செய்யாமல் இருந்து கொண்டு சட்டவிரோத கோவில்களில் யாகம் வளர்ப்பது இயற்கை நீதிக்கு எதிரானதாகும். இந்த சட்டவிரோத செயலை தமிழக அரசு செய்யாமல் இருக்க வேண்டும். யாகம் வளர்த்தால் டெங்கு காய்ச்சல் ஒழியாது. மாறாக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்தை இறைவன் நிவாரணமாக வைத்துள்ளான். அந்த மருந்தை கண்டு பிடிக்கும் வேலையைத் தான் தமிழக அரசு பார்க்க வேண்டும்.தனி மனிதர்கள் மதநம்பிக்கையோடு இருக்கலாம். அரசு மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நடக்க வேண்டும்.இதுதான் மதச்சார்பின்மை.இந்த மதச்சார்பின்மை கொள்கையில் இருந்து தமிழக அரசு நழுவாமல் நடந்து கொள்ளுமா?
செத்துப் போனவர்களுக்கு சந்தனக்கட்டை வேண்டாம்! உயிரோடுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: நீதி, நன்மை மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அவன் அறிவுரை கூறுகிறான். (16:90) நாகூர் சந்தனக்கூடு விழாவுக்கு அரசு சார்பில் சந்தனக் கட்டைகள்: முதல்வர் உத்தரவு என்ற செய்தி கடந்த 26.11.2012 அன்று வெளியான அனைத்து நாளிதழ்களிலும் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்தது. நாகூர் தர்காவின் சந்தனக்கூடு விழாவுக்கு அரசின் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 40கிலோ சந்தனக் கட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என்று நாகூர் தர்கா பொறுப்பாளரிடம் முதல்வர் கூறியுள்ளார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் தற்போது பொருளாதாரத்திலும், கல்வி வேலைவாய்ப்பிலும் மிகமிக பின்தங்கியுள்ளது.
இந்திய திருநாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தங்களது சதவீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமிய சமுதாயம் தங்களது இன்னுயிர் நீர்த்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதன் விளைவாக ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு விரட்ட ஆங்கில மொழியை துறந்த இஸ்லாமிய சமுதாயம் அதன் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு என்று அனைத்திலும் பின்தங்கியது. நாட்டுக்காக முஸ்லிம் சமுதாயம் செய்த தியாகங்களை கருத்தில் கொண்டு ஆளும் ஆட்சியாளர்கள் இந்த சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இருந்த இடஒதுக்கீட்டையும் பறித்து இந்த சமுதாயத்தை இன்னும் அதாளபாதத்தில் தள்ளினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். அதனால் சமூகரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின் தங்கிப்போன முஸ்லிம் சமுதாயம் தலித்களை விட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அன்றிலிருந்து இந்த சமுதாயம் மீண்டும் மீண்டு எழுவதற்கு ஒரே வழி இடஒதுக்கீட்டை பெறுவது தான் என்பதை உணர்ந்து முஸ்லிம்கள் தங்களது ஜீவாதாரக் கோரிக்கையான இந்த ஒதுக்கீட்டு கோரிக்கையை ஆட்சியாளர்களிடம் முன்வைத்து வருகின்றனர்.
செவிடன் காதில் ஊதிய சங்காக இந்தக் கோரிக்கை இருந்தபோதிலும் தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் வாயிலாக 3.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்றுத் தந்தது. அந்த இடஒதுக்கீடு கூட முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்றதாக இல்லை.மிகமிகக் குறைவுதான் என்பதை ஆட்சியாளர்களே உணர்ந்துள்ளனர். அதனால் தான் சென்ற தேர்தலின்போது முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது. அதேபோல அ.தி.முக. சார்பில் ஜெயலலிதா திருச்சியில் செய்த தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக வாக்குறுதியும் அளித்தார். இந்த ஜீவாதாராக் கோரிக்கையைத் தான் முஸ்லிம்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இனிமேலும் தலையில் முக்காடு போட்டு நோன்புக்கஞ்சி குடித்ததோடு மணி மண்டபங்கள் கட்டியுள்ளோம் என்று கூறி ஏமாற்றியோ, முஸ்லிம் தலைவர்கள் பெயரை எதாவது தெருக்களுக்கும் பல்கலைகழகங்களுக்கும் சூட்டியோ, மீலாது நபிவிழா என்று கூறி விடுமுறை விட்டோ, முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்ற முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொண்டனர். முஸ்லிம்கள் தங்களது 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக வாக்களித்த அ.தி.மு.க. அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றுமா? என்று காத்துக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களின் இந்த ஜீவாதாரக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதை விட்டு விட்டு தற்போது முஸ்லிம்களை குளிரூட்டுவதாக நினைத்துக் கொண்டு தமிழக அரசு வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. உயிரோடு இருப்பவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்திக் கேட்டால், செத்த பிணங்களின் மேல் எழுப்பட்டுள்ள சமாதிகளின் மேல் பூசுவதற்கு 3 லட்சம் ரூபாய்க்கு சந்தனத்தை இலவசமாக அளிப்பதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளாராம். நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரது கோரிக்கையை கனிவோடு பரிசீலனை செய்து இந்த சந்தன மரக் கட்டைகளை தர்காவிற்கு வழங்க முதல்வர் உத்தர விட்டதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் கூடி இந்த ஜீவாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைத்துள்ளதே! அதை கனிவோடு பரிசீலனை செய்ய முதல்வருக்கு மனம் வராதது ஏனோ? முஸ்லிம்களின் இடஓதுக்கீட்டை அதிகரித்து தர எண்ணமில்லை என்பதால்தானே அதுபற்றி பரிசீலனை செய்யக் கூட மனமில்லை. தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம். தற்போது தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி வீரியம் பெற்றதன் விளைவாக தர்கா மேல் முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து விட்டது. தர்காக்களில் கூட்டம் அலைமோதும் நிலைமாறி தர்காக்கள் காற்றாடிக் கொண்டுதான் இருக்கின்றன.
தற்போது தர்காக்களுக்கு இந்துக்கள் தான் அதிகமாக செல்கின்றனர். இந்நிலையில் இந்த சலுகைகளை அறிவித்திருப்பது இந்துக்களை திருப்திப்படுத்தத்தானோ என்று நடுநிலையாளர்களும் நினைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தர்காக்களில் உள்ள சமாதிகளின் மீது சந்தனம் பூசுவதற்கு இத்தனை லட்சங்களில் சந்தனமரக் கட்டைகள் வழங்கி அரசாங்கப் பணத்தை வீணடிப்பதா? என்று முஸ்லிம்களின் கோபம் முதல்வரின் பக்கம் திரும்புவதற்கும் இது வழிவகுக்கும். இப்படி வீணடிக்கப்படும் பல லட்சங்களைக் கொண்டு எத்தனையோ ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யலாமே?என்று மக்கள் அ.தி.மு.க.-வை திட்டுவதற்குத் தான் இந்த சந்தனக் கட்டைகள் வழங்கும் வைபவம் உதவும் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். தலித்களை விட பின்தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமான உயர்த்தி வழங்குவது தான் உடனடித் தேவை என்பதை உணர்ந்து முதல்வர் உடனடி நடவடிக்கை எடுப்பாரா? அல்லது நோன்பு கஞ்சி குடித்து, தர்காக்களுக்கு இன்னும் பல சலுகைகள் செய்து, முஸ்லிம் சமுதாயத்தின் கோபத்திற்கு ஆளாவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே நேரத்தில் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இஸ்லாத்திற்கு மாற்றமான தவறான செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டாவிட்டால் அந்த தவறுகளே நாளடைவில் உண்மையென்று மக்கள் மனதில் பதிந்து விடக்கூடாது என்பதற்காக கீழ்க்கண்ட செய்திகளையும் சுட்டிக்காட்டிக் கொள்கிறோம். இந்தியாவில் உள்ள புனிததலங்களில் சிறப்பு வாய்ந்ததும் இஸ்லாமிய புனித தலங்களில் முக்கியமானதும் என்று நாகூர் தர்காவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அது இஸ்லாமியப் பார்வையில் புனிதத்தலம் அல்ல. தர்காக்கள் என்பது இடித்து தரைமட்டமாக்கப்பட வேண்டியவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். புனித சமாதியில் சந்தனக்கூடு நாளன்று சந்தனக் கட்டைகள் அரைத்து சந்தனம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சமாதியில், பூசப்படுகிறது என்று கூறியுள்ளார். ஒரு சமாதியில் பூசுவதற்கு 40 கிலோ சந்தனம் தேவைப்டுமா என்று முதல்வருக்கு சந்தேகம் எழவில்லையா? அதுமட்டுமல்லாமல் நாகூர் தர்காவில் அடங்கியுள்ளதாக சொல்லப்படும் சாகுல்ஹமீது அவ்லியா(?) பல அற்புதங்கள் செய்ததாகக் கதை விடுகின்றனர். அப்படியானால், அவ்வளவு அற்புதங்கள் செய்த அற்புத(?) அவ்லியாவிற்கு வெப்பத்தை போக்க ஏ.சி. போடுவதற்குப் பதிலாக சந்தனம் பூசி குளிருட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
அவர்தான் தனக்குத்தானே அற்புதம் செய்து தன்னையே குளிரூட்டிக் கொள்வாரே! அவ்வாறு செய்ய அவரால் இயலவில்லையா? அந்த அளவிற்கு எந்த சக்தியும் பெறாத இந்த அவ்லியா தான் மக்களுக்கு நல்லது செய்யப்போகின்றார் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.இதே நாகூர் தர்காவில் தான் சில நாட்களுக்கு முன்பு திரைப்படக் கூத்தாடி ரஜினிகாந்த் பிறந்த நாளன்று சிறப்பு ஃபாத்திஹா ஓதினார்கள். சிறப்பு ஃபாத்திஹாவிற்கு தப்ரூக் (பிரசாதம்) கேட்டு தமிழக முதல்வரிடத்தில் தர்கா நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தால் அதற்கும் பல லட்சங்கள் மானியம் கொடுக்க முதல்வர் முன்வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.நல்லவேளை அந்த கோரிக்கையை தர்கா நிர்வாகிகள் வைக்காமல் விட்டார்கள். முதல்வரும் திருந்த வேண்டும். தர்காவாதிகளும் திருந்த வேண்டும். அதுவே நடுநிலைவாதிகளின் எதிர்பார்ப்பு. திருந்துவார்களா?
நன்றி: துபை TNTJ

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...