Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 12, 2012

2030-ஆம் ஆண்டு உலகின் தலைமையை இந்தியா,சீனா வகிக்கும் – அமெரிக்க புலனாய்வு அறிக்கை!

வாஷிங்டன்:அடுத்த 20 ஆண்டுகளில் ஆசியாவின் சக்திமிக்க நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கரங்களில் உலகின் தலைமை இருக்கும் என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கை கூறுகிறது. மேப்பிள் க்ராஃப்ட் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகளை உறுதிச் செய்கிறது அமெரிக்க புலனாய்வு அறிக்கை.

 2030-ஆம் ஆண்டில் உலகின் கட்டுப்பாடை சொந்தமாக்கும் திறனை நடுத்தர வர்க்க நாடுகள் பெற்றுவிடும் என்று அமெரிக்க நேசனல் இண்டலிஜன்ஸ் கவுன்சில் நடத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது. உலகில் விரைவில் உருவாகும் மோதல் உணவுப் பொருட்களுக்காகவும், குடிநீருக்காகவும் நடக்கும். மேற்காசியாவும், ஆப்பிரிக்க நாடுகளும் இப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. உலகில் நடுத்தர வர்க்க மக்கள் தொகை 300 கோடியை தாண்டும். ஏழைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீரின் தட்டுப்பாடு, நுகர்வு சமூகமான நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் நடுத்தர வர்க்கத்தினரின் விழிப்புணர்வுக்கு காரணமாகும்.உலக மக்கள் தொகையில் கணிசமான தொகையினர் இந்நாடுகளில் உள்ளனர். இங்குள்ள பொருளாதார கட்டமைப்பில் இருந்து வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர் கல்வி-சுகாதார துறையில் உயர்வு பெறுவர்.

இந்த சமூகத்தில் உள்ள பெண்கள், பொருளாதார பாதுகாப்பும், அதிகாரத்தை கையாளுபவர்களாகவும்
இருப்பர். பொருளாதார-சமூக துறைகளில் நடுத்தர வர்க்கத்தினரின் ஆதிக்கம் பெரும்பாலான உலகநாடுகளில் வெளிப்படும். இதுவெல்லாம் மனித வாழ்க்கையை நகரமயமாக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
-thoothuonline

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...