Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 10, 2013

அடுத்த ஆண்டுமுதல் துபாயில் ஹலால் சான்றிதழ் கட்டாயம்!

அடுத்த அண்டு முதல் ஐக்கிய அரபு அமிர் ராஜ்யம் சகல உற்பத்தி பொருட்களிலும் ஹலால் சான்றிதழ் இருப்பது அவசியம் என அறிவித்துள்ளது.

துபாயை ஹலால் பொருளாதாரத்தின் தலைமையகமாக மாற்றும் ஐக்கிய அரபு அமிர் ராஜ்யத்தின் உப ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முஹம்மத் பன் ரசித் அல் மக்தூமின் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஹலால் ஒழுங்குவிதி பொதியின் கீழ் உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக அழகுச் சாதனங்கள், வாசனைப் பொருட்கள், பிடைவைகள் மற்றும் உபகரணங்களுக்கும் ஹலால் சான்றிதழ் இருக்க வேண்டும். தற்போது ஐக்கிய அரபு அமிர் ராஜ்யத்தின் உணவு பொருட்களுக்கு ஹலால் என்பதனை உறுதிப்படுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளே தற்போதிருப்பதாக அமிரேட்சின் தரப்படுத்தல் மற்றும் காலநிலை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் முஹம்மத் சாலே பத்ரி தெரிவித்தார்.

அண்மையில் ஒஜாசி அமைப்பு சகல இஸ்லாமிய நாடுகளிலும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்களுக்கு அமுல்படுத்தும் ஹலால் ஒழுங்கு விதியை வகுத்து இஸ்லாமிய நாடுகள் இதனைக் கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் கேட்டிருந்தது. ஒவ்வொரு அமிரேட்டிலும் ஹலாலை உறுதிப்படுத்துவதற்காக
மாநகர சபை மட்டத்தில் தாமாக வகுக்கப்பட்ட ஒழுங்கு விதிகளே தற்போது அமுலிலுள்ளது. புதிய திட்டம் முழு நாட்டுக்கும் மட்டுமன்றி ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கும் பொருத்தமாக அமையும் என்றும் பத்ரி தெரிவித்தார்.
-source:berunews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...