சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சச்சார் கமிட்டி ஏழு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்தக் கமிட்டி தனது அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து விளக்கியிருந்தது. இந்நிலையில், சச்சார் கமிட்டி தொடர்பாகமும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது:
சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வின் முன் விசாரணையில் உள்ளது. அரசின் முடிவுக்கு நீதிமன்றம் விரைவில் அங்கீகாரம் அளிக்கும் என்று நம்புகிறோம். மத்திய அரசின் முடிவு நியாயமானது மட்டுமின்றி சட்டபூர்வமானதும் ஆகும். நாட்டில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் 9 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் எழுப்பப்படுகிறது. சவூதி அரசாங்கமே தனது ஒதுக்கீட்டை 50 சதவீதமாகவும், மற்ற நாடுகளுக்கான ஒதுக்கீட்டை
20 சதவீதமாகவும் குறைத்துள்ளது. தனியார் சுற்றுலா உரிமையாளர்கள் மூலம் அனுப்பப்படும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதா? வேண்டாமா? என்பதுகுறித்து மத்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்யும். மக்கள்தொகையின் அடிப்படையில் ஹஜ் கோட்டாவை உயர்த்துமாறு நாம் அடுத்த ஆண்டு சவூதி அரசிடம் கோர உள்ளோம் என்றார்
-thoothuonline.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...