Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 16, 2013

மருத்துவர் படிப்பிற்கு கட்-ஆஃப் எவ்வளவு?‏....

சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நடைபெறுமா அல்லது 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நடைபெறுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மத்திய அரசு மிக விரைவில் அனுமதி அளிக்கும் நிலையில் மொத்தம் 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வை நடத்தி விடலாம் என்பதால் கலந்தாய்வு அட்டவணை தயாரிப்புப் பணியை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஒத்திப் போட்டுள்ளது.

நடப்பு ஆண்டு (2013-14) கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணையும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை; கலந்தாய்வு முடிந்த பிறகே கட்-ஆஃப் மதிப்பெண்ணை வரையறை செய்ய முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் நலன் கருதி எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் அடிப்படையில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக கீழே
மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். 2,065 எம்.பி.பி.எஸ்.இடங்களுக்கு
கட்-ஆஃப் ஓ.சி. 198.25 பி.சி. 197.25 பி.சி. (எம்) 196.00 எம்.பி.சி. 196.25 எஸ்.சி. 193.00 எஸ்.சி. (ஏ) 190.50 எஸ்.டி. 186.25

source-tntjstudentwing

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...