2006 ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த அதிகாரிகள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மறு விசாரணைச் செய்த தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஒரு மாதம் முடியும் வேளையில், இவ்வழக்கில் அநியாயமாக முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக சேர்த்த புலனாய்வு அதிகாரிகள் மீது செய்யது முஸ்தபா அமீன் என்ற நபர் பொது நல மனுவை அளித்துள்ளார்.
மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படையின் முன்னாள் தலைவர் கே.பி.ரகுவன்ஷி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் என்.என்.ராய், மஹராஷ்ட்ரா டி.ஜி.பி சஞ்சீவ் தயாள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.நிரபராதிகளை குற்றவாளிகளாக்கிய அதிகாரிகளை சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்யவேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவுச் செய்திருந்தது.2006 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி மஹராஷ்ட்ரா அரசு இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க ஒப்படைத்தது.ஆனால், ஏ.டி.எஸ்ஸின் கருத்தையே சி.பி.ஐயும் தெரிவித்தது.ஆனால், மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணம் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாம் என்பதை சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து 2012 ஏப்ரல் மாதம் என்.ஐ.ஏ இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றது. குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாம் என்பதை கண்டறிந்த என்.ஐ.ஏ, அவர்கள் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அதேவேளையில் முஸ்லிம்களுக்கு எதிரான விமர்சனங்கள் இதில் இடம் பெறவில்லை. மனித நேயமில்லாமல் செயல்பட்ட முஸ்லிம் விரோத அதிகாரிகளுக்கு
இந்திய அரசியல் சாசனத்தில் நம்பிக்கையில்லை என்று அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ் கைதுச் செய்த ஒன்பது இளைஞர்களையும் நீதிமன்றம் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று அமீன் முஸ்தஃபாவின் வழக்கறிஞர் இஃஜாஸ் நக்வி கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் இன்று உயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். இவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தருவது அவசியம் என்று அவர் கூறினார்.
source:-thoothuonline.com

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...