சிதம்பரத்தில் உழவர்சந்தை முடங்கியதால் அண்ணா கலையரங்கம் கார், வேன் நிறுத்து மிடமாக மாறி விட்டது. காய்கறி விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் உழவர்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாக விளங்குவது சிதம்பரம், கிராமப்புறங்களை மட்டுமின்றி பிச்சாவரம் சுற்றுலா மையம், உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோயில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிலும் அண்ணாமலை பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு கலைக்கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் சிதம்பரம் நகரத்தில் அமைந்துள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிதம்பரத்தில் கிராமப்புற விவசாயிகளின் விளை பொருட்களை விற்கவும், நகர்ப்புற மக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடையும் வகையிலும் கடந்த திமுக ஆட்சியில் 9.8.2000 அன்று ரூ. 7.5 லட்சம் செலவில் அண்ணா கலையரங்கில் உழவர் சந்தை துவங்கியது. உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய 81 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
2001ம் ஆண்டு வரை எவ்வித தடையுமின்றி சீராக இயங்கி வந்த உழவர்சந்தை அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களை கொண்டு வருவதை நிறுத்தி விட்டனர். சிலர் மட்டும் வேறு வழியின்றி காய்கறிகளை கொண்டு வந்து விற்றுவிட்டு சென்றனர். பயன்பாடு குறைந்ததால் உழவர்சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. வியாபாரம் சரியான முறையில் இல்லாததால் வியாபாரிகள் நடராஜர் கோயில் கோபுர வாயில், கீழ வீதி, தெற்குவீதி ஆகிய பகுதிகளில் சாலையோரம் காய்கறிகளை வைத்து விற்றுவிட்டு செல்கின்றனர். உழவர்சந்தை இயங்காததால் அண்ணா கலையரங்கம் மிக மோசமான நிலையில் காட்சியளித்தது. இந்நிலையில் சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வேன் ஸ்டாண்ட், கார் ஸ்டாண்ட் ஆகியவை அண்ணா கலையரங்கத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்தால் நகரத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தபாடில்லை. இதனால் பெண்கள் மனஉலைச்சல் அடைந்துள்ளனர். எனவே இப்போதைய சூழ்நிலையில் மறைந்து போன உழவர்சந்தையை மீண்டும் இயக்கினால் பொதுமக்கள்
பயனடைவர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம் பகுதியில் உழவர்சந்தை சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் சிதம்பரத்தில் மட்டும் உழவர்சந்தை மறைந்து விட்டது. எனவே சிதம்பரத்தில் மீண்டும் உழவர்சந்தையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Thanks-Dinakaran

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...