Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 13, 2013

அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பில் முஸ்லிம் நாடுகள்!

இணையதளத்தைப் பயன்படுத்தி உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பல்வேறு ரகசிய தகவல்களை சேகரிப்பது, இ-மெயில் விவரங்களை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அமெரிக்க உளவு அமைப்புகள் மேற்கொண்டிருப்பது சமீபத்தில் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இப்போது நாடுவாரியாக எந்தெந்த நாடுகளை அமெரிக்கா அதிகம் உளவு பார்த்து தகவல்களை சேகரித்துள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது.

இதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் மட்டும் 14 கோடி ரகசிய தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகளிடம் இருந்து அதிக தகவல்களை இணைய தளம் மூலம் அமெரிக்க உளவு அமைப்புகள் திருடியுள்ளனர். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் அரபு நாடுகள் இப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக எகிப்தை, அமெரிக்கா அதிகம் கண்காணித்துள்ளது. இப்பட்டியில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து 6 கோடியே 30 லட்சம் முக்கிய தகவல்களை அமெரிக்கா ரகசியமாக சேகரித்துள்ளது. நாடுகளை எந்த அளவுக்கு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதை வண்ணங்கள் மூலம் அமெரிக்கா பிரித்து வைத்துள்ளது. இதில் பச்சை வண்ண குறியீடு கொடுக்கப்பட்டுள்ள நாடுகள் அதிகம் கண்காணிப்புக்கு உள்ளாகவில்லை.

சிவப்பு நிறம் குறியீடு உள்ள நாடுகள் அதிகம் கண்காணிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவே மஞ்சள், ஆரஞ்சு நிற குறியீடுகளில் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சிவப்புக்கு அடுத்தபடியாக உள்ள ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை அமெரிக்கா அளித்துள்ளது. இதனிடையே தங்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு செயல்களை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசு பல தகவல்களை
வெளியிட்டுள்ளது. அதன்படி பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம்தான் அவரது சதிவேலை முறியடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார் என்றும், அமெரிக்காவில் பல நாசவேலைகள் இதனால்தான் முறியடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:-Berunews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...