Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 22, 2013

உத்தரகாண்ட் வெள்ளப் பகுதிகளில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் தீவிரம்!

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட ஹரித்துவாரில் இருந்து நேற்று 40 உடல்கள் மீட்கப்பட்டன. கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் சிக்கியுள்ள 9 ஆயிரம் பேரை மீட்கும் பணியில் 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் கடந்த வார இறுதியில் பெய்த கனமழை 3 நாட்கள் நீடித்தது. இதனால் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, சமோலி, உத்தரகாசி போன்ற புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆங்காங்கே சிக்கியுள்ள யாத்திரிகர்களை மீட்கும் பணியில் விமானப்படையின் 20 ஹெலிகாப்டர்களும், ராணுவத்தின் 16 இலகு ரக ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், எல்லை சாலை அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பேரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரித்துவாரில் நேற்று நடந்த மீட்பு பணியின் போது 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேதார்நாத்தில் சிக்கியுள்ள 250 பேரையும், பத்ரிநாத்தில் சிக்கியுள்ள 9 ஆயிரம் பேரை மீட்கும் பணியும் தொடங்கியுள்ளது. கேதார்நாத்தில் நடைபெம் மீட்பு பணிகளை உத்தரகாண்ட் வேளாண் அமைச்சர் ஹரக் சிங் ராவத் நேற்று பார்வையிட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘‘கேதார்நாத் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஆங்காங்கே சடலங்கள் சிதறி கிடக்கின்றன. நம்பிக்கையின் மையமாக இருந்த இடம் மயானமாக காட்சியளிக்கிறது. கேதார்நாத்தில் மீண்டும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுவர குறைந்தது 5 ஆண்டுகளாகும்’’
என்றார்.

 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஓய்வெடுப்பதற்காக 28 முதல் ஜூலை 1ம் தேதி வரை இமாச்சல பிரதேசம் செல்ல இருந்தார். மழை சேதம் காரணமாக இந்த பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.வெள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்களுக்காக ரயில்வே இலவச சிறப்பு ரயில்களை இயக்குகிறது.உத்தரகாண்டில் சமோலி, உத்தரகாசி உட்பட 3 மாவட்டங்களில் 207 செல்போன் கோபுரங்கள் வெள்ளத்தால் சாய்ந்து விட்டன. அவற்றை சரி செய்யும் பணி நடக்கிறது.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...